பெண் அடிமைத்தனத்திற்கான தீர்வு
பெண் அடிமைத்தனத்திற்கான தீர்வு
உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப் பற்றி பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன்.
மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும், மன ரீதியிலும், பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில் தான் இன்று வரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.
அவளை மீண்டும் மீட்டு எடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதல பாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணர முடிகின்றது.இந்த சிறிய புத்தகத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும் ,எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.
இதனை வாசிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றி அமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை நான் உங்களுக்கு அற்பணிக்கின்றேன்.நீங்களும் ஒரு இனத்திற்கு எதிரான இந்த சமூகத்தின் மிகக் கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக் கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
உலக அளவில் பெண்களுக்கு எதிராக ஏழுவிதமான மிக மோசமான அநீதிகளை இந்த சமூகம் இழைத்துவருவதாக நான் காண்கின்றேன். நிச்சயமாக அந்த அநீதிகளுக்கு பெரும் அளவில் இந்த சமூகத்தின் கொடூரமான கட்டமைப்பே காரணம் என்பதாகவும் நான் உறுதியாக நம்புகின்றேன்.
சமூகத்தின் அந்த கொடூர கட்டமைப்புகள் ஒவ்வொன்றையும் இங்கு நான் உங்கள் பார்வைகளுக்குத் தருகின்றேன்.நீங்களும் ஒரு பெண்ணாகவோ அல்லது பெண்ணியவாதியாகவோ இருந்தால் நான் குறிப்பிடும் இந்த கருத்துக்கள் சம்மந்தமான குறை நிறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.நிச்சயம் அவற்றையும் நான் மறு பதிப்பில் சேர்த்துக் கொள்கின்றேன்.
நன்றி : Writer. A. Sadam husain hasani